யாழ்ப்பாணம் நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது.
தொடர்ச்சியாக 16 நாட்கள் இடம்பெறவுள்ள நிகழ்வு 25ஆம் திகதி நண்பகல் 12 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 4ஆம் திகதி சிவபூஜை கைலாச காட்சியும் அன்று இரவு திருமஞ்சத் திருவிழாவும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை பகல் கைலாச காட்சியும், இரவு சப்பறத் திருவிழாவும் இடம்பெறுவதுடன்,8ஆம் திகதி தேர் திருவிழா இடம்பெறவுள்ளது.
இதேவேளை 9ஆம் திகதி காலை தீர்த்தோற்சவமும்,அன்று மாலை திருவூஞ்சலும் மறுநாள் இரவு பூங்காவனம் மற்றும் தெப்போற்சவம் இடம்பெறவுள்ளது.