இன்றைய ராசி பலன்கள் 23.06.2017

  • மேஷம்

    மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: மாலை 6.50 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மாலையிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். மாலை 6.50 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

  • கடகம்

    கடகம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணவரவு உண்டு. உறவினர்களால் அனுகூலம் உண்டு. நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • கன்னி

    கன்னி: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிகொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சாதிக்கும் நாள்.

  • துலாம்

    துலாம்: மாலை 6.50 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து நிம்மதி கிட்டும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மாலை 6.50 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கடினமாக உழைத்து முன்னேறும் நாள்.

  • தனுசு

    தனுசு: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி வரும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

  • மகரம்

    மகரம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுபெருகும். நட்பால் ஆதயம் உண்டு. பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். நினைத்தது நிறைவேறும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். சகோதரர் சாதகமாக இருப்பார். கல்யாண பேச்சு வார்த்தை கைக்கூடும். புது வேலைக் கிடைக்கும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

  • மீனம்

    மீனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தைரியம் கூடும் நாள்.