குடியரசுத் தலைவர் தேர்தலை காங்கிரஸ் அரசியலாக்குவதாக தமிழக பாஜக தலைவங்ர தமிழிசை சவுந்தர் ராஜன் குற்றம்சாட்டியுள்ளார். ராம்நாத் கோவிந்திற்கு அதிமுகவின் 2 அணிகளும் ஆதரவு தெரிவித்திருப்பது வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிகிறது. இதனால் குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பீகார் ஆளுநராக இருந்த ராம் நாத் கோவிந்தை, குடியரசுத் தலைவர் வேட்பாளராக பா.ஜ கூட்டணி அறிவித்தது.
அவரை எதிராக எதிர்க்கட்சிகள் லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமாரை நேற்று அறிவித்தன. அவரைஇ காங்கிரஸ் உட்பட 17 கட்சிகள் நேற்று ஒருமனதாக தேர்வு செய்தன.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குடியரசுத் தலைவர் தேர்தலை காங்கிரஸ் அரசியலாக்குவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அதிமுகவின் 2 அணிகளும் ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம் பாஜகவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.