சீனாவில் கொத்து கொத்தாக தொங்கிய நாய்கள்: விமரிசையாக நடைபெற்ற நாய்கறி திருவிழா

சீன மக்களால் ஆண்டு தோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நாய் திருவிழாவிற்கு, விலங்கியல் வன்கொடுமை சட்டத்தின் படி தடை விதித்த போதும் இந்த ஆண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

சீன மக்களிடம் நாய்கறி சாப்பிடும் பழக்கம் உள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் நாய்கறி திருவிழா நடத்துவது வழக்கம்.

இந்த திருவிழாவின் போது, பல்லாயிரக்கணக்கான நாய்களை கொன்று அவற்றில் விதவிதமான உணவை தயாரித்து சாப்பிடுவார்கள்.

இந்த திருவிழாவுக்கு பல்வேறு சமூக அமைப்புகளும், விலங்கியல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் சீன அரசு நாய்கறி திருவிழா நடத்த ஏற்கனவே தடை விதித்து இருந்தது.

நேற்று நாய்கறி திருவிழா நடக்கும் நாள் ஆகும். ஆனாலும், தடையை மீறி நேற்று சீனாவில் பல இடங்களில் நாய்கறி திருவிழா நடைபெற்றது.

நாய்களை கொன்று அதன் கறிகளை பல இடங்களில் தொங்கவிட்டு இருந்தனர். மேலும் அவற்றில் இருந்து விதவிதமான உணவு தயாரித்து காட்சிக்கு வைத்து இருந்தனர்.

யூலின் நகரில் இந்த கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடந்தது. அங்கு பெரும்பாலான இடங்களில் நாய்கறி திருவிழா நடந்ததை காண முடிந்தது.

இறைச்சி கடைகளிலும் ஏராளமான நாய்களை கொன்று தொங்கவிட்டு இருந்தனர்.