அமெரிக்காவில் சொந்தமாக நகரத்தை உருவாக்கும் கூகுள் நிறுவனம்

இணையத்தள ஜாம்பவானான கூகுள் நிறுவனம் அமெரிக்காவில் சொந்தமாக நகர் ஒன்றை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச அளவில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது தொழிலை விரிவுப்படுத்துவதுடன் அதற்கான அலுவலக இருப்பிடத்தையும் விரிவுப்படுத்த முடிவு செய்துள்ளது.

இதன் முதற்கட்டமாக கலிபோர்னியா மாகாணத்தில் சொந்தமாக நகர் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது.

அதாவது, San Jose நகருக்கு சொந்தமான 140 ஏக்கர் நிலத்தை அரசாங்கத்திடம் இருந்து பெற்று அங்கு தனது பிரமாண்டமான அலுவக கட்டங்களையும், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு தேவையான 3,000 சொகுசு வீடுகளையும் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூகுள் அலுவலகம், அலுவகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வீடுகள், ஊழியர்களுக்கு தேவையான பிற வசதிகள் கொண்ட ஸ்தாபனங்களை உருவாக்குவதன் மூலம் இப்பகுதி ஒரு புதிய நகரமாக காட்சியளிக்கும்.

இப்பகுதியில் நிலம் மட்டும் சுமார் 130 மில்லியன் டொலருக்கு கூகுள் நிறுவனம் வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்பணியை தொடங்குவதன் மூலம் இப்பகுதியில் சுமார் 20,000 புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும்.

இதுமட்டுமில்லாமல், இப்பணியை தொடங்குவதற்கு நகராட்சி நிர்வாகமும் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.