இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்பிளே விலகினார். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விராட்கோலி முதல்முறையாக மவுனத்தை கலைத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கும்பிளே தனது பார்வையில் சில விஷயங்களை கூறியதோடு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகி உள்ளார். அவரது முடிவை நாம் அனைவரும் மதிக்க வேண்டும். ஒரு கிரிக்கெட் வீரர் என்ற வகையில் கும்பிளே மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். தேசத்திற்காக அவர் செய்துள்ள சாதனைகள் அளப்பரியது. அதை யாரும் பறித்து விட முடியாது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டி நிறைவடைந்ததும் கும்பிளேவின் ராஜினாமா நடந்துள்ளது. வீரர்களின் ஓய்வறையில் என்ன நடந்தாலும் அது நமக்குள்ளே இருக்க வேண்டும். ஒருபோதும் வெளியில் கசியக்கூடாது என்ற கலாசாரத்தை உருவாக்கி அதை கடந்த 3-4 ஆண்டுகளாக கடைபிடிக்கிறோம். அது தான் எங்களுக்கு முக்கியம். எனவே வீரர்களின் அறையில் நடக்கும் விஷயங்களை வெளிப்படையாக சொல்ல முடியாது.
இவ்வாறு கோலி கூறியுள்ளார்.