தேசிய இரத்தினக்கல் அதிகாரச்சபையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் யாழ். வணிகர் கழகம் இணைந்து யாழ். மாவட்டத்தை சேர்ந்த நகைக்கடை வர்த்தகர்களுக்கு விஷேட வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளனர்.
தேசிய இரத்தினக்கல் அதிகாரச்சபையின் அதிகாரிகள் இணைந்து யாழ். வணிகர் கழகப்பணிமணையில் எதிர்வரும் ஜூலை மாதம் 04 ஆம் திகதி நடமாடும் சேவை ஒன்றினை நடத்தவுள்ளனர்.
குறித்த நடமாடும் சேவையில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நகைக்கடை வர்த்தகர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்களது நகைக்கடை வர்த்தக நிலையங்களுக்கு இதுவரை அனுமதி பெறாவிடின் தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு யாழ்.வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறித்த வேண்டுகோளில்,
ஏற்கனவே, 2016 ஆம் ஆண்டுக்கான அனுமதியைப் பெற்றவர்கள் 2017 ஆம் ஆண்டுக்காகத் தங்களது அனுமதியைப் புதுப்பிப்பதற்கு வசதியாக 2016 ஆம் ஆண்டில் பெற்ற அனுமதிப்பத்திரத்தின் புகைப்படப் பிரதியுடன் விண்ணப்பிக்கலாம்.
இந்த நடமாடும் சேவையைப் பயன்படுத்தி நகைக்கடை வர்த்தகர்கள் வர்ண அடையாள அட்டைக்கும் விண்ணப்பிக்க முடியும்.
புதிதாக நகைக்கடையைப் பதிவு செய்வோர் வியாபாரச் சான்றிதழ் மூலப்பிரதி, அடையாள அட்டைப் பிரதி, பதிவுக்கட்டணம் – 5000 ரூபா(வரி நீங்கலாக) ஆகியவற்றுடன் சமூகமளிக்க வேண்டும்.
வர்ணப்புகைப்படத்தினாலான அடையாள அட்டையைப் பெற விரும்புவோர் மட்டும் மேலதிகமாக ரூபா 1173 ரூபா பணத்துடன், பாஸ்போட் அளவிலான வர்ணப்புகைப்படம் மற்றும் அடையாள அட்டையின் மூலப்பிரதி என்பவற்றைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு 021 222 8593 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியுமென யாழ். வணிகர் கழகம் குறிப்பிட்டுள்ளது.