அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 215ஆக உயர்வு

அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 215 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அண்மையில் நாட்டின் 15 மாவட்டங்களில் மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்தன. இந்த அனர்த்தங்களினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 215.

அத்துடன், அனர்த்தங்களினால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 64, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 151 ஆகும்.

அனர்த்தங்களினால் 3029 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுள்ளதாக 61,560 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இன்னமும் 1,122 குடும்பங்கள் 4,007 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா குறிப்பிட்டுள்ளார்.