அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்துவோருக்கு அரச தொழில்கள் வழங்காமல் இருப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச சொத்துக்களை சேதப்படுத்தியதாக பொலிஸ் அறிக்கைககளில் குறிப்பிடப்பட்ட எவருக்கும் இனி வரும் காலங்களில் அரச தொழில்களை வழங்குவதில்லை என்ற ஓர் சட்டத்தை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பொறியியலாளர் மருத்துவர் நிர்வாக சேவை பதவிகள் மற்றும் அரச பணிகளுக்கான பரீட்சையில் உயர் சித்தி பெற்றுக்கொண்டிருந்தாலும் அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்தினால் அவ்வாறானவர்களுக்கு அரச தொழில் வாய்ப்பு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டங்களை அண்மைக்காலமாக நடத்தி வருகின்றனர்.
இவ்வாறான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களினால் அரச சொத்துக்களுக்கு பாரியளவில் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதனால் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதில்லை என்ற தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது.
நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்திபெறுவோர் தொடர்பில் இந்த நியதி முன்னர் அமுல்படுத்தப்பட்ட போதிலும் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த நியதி பின்பற்றப்படவில்லை.
மேலும், இந்த நியதியை மீளவும் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.