ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன்கள் தர வரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் விராட்கோலி 865 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.2-வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (861 புள்ளி), 3-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் (847 புள்ளி) உள்ளனர்.
இந்தியாவின் ஷிகர் தவான் 10-வது இடத்தில் உள்ளார். பந்து வீச்சாளர்களில் ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட் (732 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். முதல் 10 இடத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் யாரும் இடம் பெறவில்லை.