கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதியின்றி பட்டா வாகனத்தில் கடத்தி சென்ற கடற்சிப்பிகைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது மானிப்பாய் பகுதியினை சேர்ந்த சாரதியினை கைது செய்துள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
மானிப்பாய் பகுதியில் இருந்து பெரியவிளான் பகுதிநோக்கி வந்து கொண்டிருந்த பட்டா வாகனத்தை உப பொலிஸ்பரிசோதகர் தலமையில் கடமையில் நின்ற பொலிஸார் விளாவடி பகுதியில் வைத்து மறித்து சோதனை மேற்கொண்டனர்.
இதன் போது அனுமதிபத்திரம் இன்றி கடற்சிற்பிகளை கடத்தி வந்தமை தெரியவந்துள்ளது. இதன் போது சாரதியையும் கடற் சிப்பியையும் பொலிசார் கைதுசெய்தனர்.
கைதான சாரதியும் சான்றுபொருளும் மல்லாகம் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.