தமிழரசுக்கட்சியும் வடக்கு மாகாண முதலமைச்சரும் ஒன்று சேர்ந்து செயற்பட இணக்கம் கண்டுள்ளதாக தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இரு பகுதிக்கும் இடையில் பிழவு ஏற்பட்டிருப்பது எமது இனப்பிரச்சினையை தீர்ப்பதில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
எனவே எமக்கிடையில் இனி பிழவோ நெருக்கடி நிலமையோ வராது என்றும் இதன் போது குறிப்பிட்டார்.