டெங்கை அழிக்க புதிய டெங்கு நுளம்புகள்

டெங்கு காய்ச்சலை பரப்புகின்ற கொசுக்களை அழிப்பதற்கு புதிய இரண்டு வகை கொசுக்களை உருவாக்கியுள்ளதாக மத்திய அரச மருத்துவ பரிசோதனை நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள இந்த நிலையத்தின் சிறப்பு வைத்திய நிபுணர் சாகரிகா சமரசிங்க, இந்த இரு கொசு வகைகளை தனது நிலையத்திலுள்ள பரிசோதனை கூடத்தில் உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த புதிய இரு வகை கொசுக்களை, பொதுவாக கொசுக்கள் பரவுகின்ற இடங்களில் பரப்பி விடுவதன் முலம் டெங்கு காய்ச்சல் பரப்புகின்ற கொசுக்களை ஆரம்பக் கட்டத்திலேயே அழித்துவிடலாம் என்று அவர் கூறினார்.
கொசு மருந்து அடித்தல்
இந்த புதிய இரு கொசு வகைகளை தற்போது மீரிகம, கண்டலம, குண்டசாலை, பேராதெனிய ஆகிய பிரதேசங்களில் பரப்பியுள்ளதாக தெரிவித்த வைத்திய நிபுணர் சமரசிங்க இந்த நடவடிக்கை வெற்றிகரமாக அமைந்துவிட்டதாக தெரிவித்தார்.

இந்த கொசுக்களை டெங்கு காய்ச்சல் அதிகமாக காணப்படும் நகர் பகுதிகளில் பரப்புவதற்கான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.