ஐக்கிய ராஜ்ஜிய நாடாளுமன்ற வலையமைப்பில் இணையத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இந்த இணையத் தாக்குதல் பற்றி வெள்ளிக்கிழமை இரவு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெஸ்ட்மினிஸ்டர் எஸ்டேட்டிற்கு வெளியே தங்களுடைய மின்னஞ்சல்களை பார்ப்பதில் கஷ்டங்களை சந்தித்தாக கூறியிருக்கின்றனர்.
“மின்னஞ்சல்களை பார்க்க முடியாமல் போனது இணையத் தாக்குதலால் அல்ல. இந்த பிரச்சனையை கையாளுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியால்தான்” என்று நாடாளுமன்றத்தின் பெண் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து, தேசிய இணைய பாதுகாப்பு மையத்துடன் நாடாளுமன்ற அதிகாரிகள் தொடர்பு மேற்கொண்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
“நாடாளுமன்ற பயனாளர் கணக்குகளின் உள்ளே செல்வதற்கு அதிகாரப்பூர்வமற்ற முயற்சிகள் நடைபெற்றிருப்பதை நாடாளுமன்ற அவைகள் கண்டுபிடித்திருக்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.
“இந்த சம்பவம் தொடர்பாக புலனாய்வை தொடர்ந்து வருகின்றோம். கணினி வலையமைப்பை பாதுகாப்பதற்கு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்” என்று இந்த செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
தொலைக் கட்டுப்பாட்டு வசதி நிறுத்தம்
“உறுப்பினர்களையும், ஊழியர்களையும் பாதுகாக்கும் அமைப்புக்களை வைத்திருக்கின்றோம். நம்முடைய கணினி அமைப்புக்களை பாதுகாப்பதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.
“இந்த வலையமைப்பை பாதுகாத்துகொள்ள தொலைக் கட்டுப்பாட்டு வசதியை நிறுத்தியுள்ளோம்” என்று அவர் மேலும் கூறினார்.