இனப்பிரச்சினை தீர்வு மற்றும் மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்,காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம் போன்றவற்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் இணைந்து செயற்படுவத ற்கானஇணக்கம் காணப்பட்டுள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமானமாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.
இன்றைய தினம் மாலை 5 மணிக்கு யாழ்.மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசு கட்சியின் தலைமை அலுவலகத்தில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்குமிடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
மேற்படிசந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மாவை சேனாதிராஜாமேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.
இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,
வடமாகாணசபையில் உருவாகிய பிரச்சினைகள் குறித்தும், எதிர்காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள்தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளோம்.
மேலும் வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளிலோஇனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் எங்களுக்குள் பிரச்சினைகளோ குழப்பங்களோ இல்லாதுசெயற்பட வேண்டும் என்பது தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளோம்.
அதேபோல் வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் முதலமைச்சரான பின்னர்இந்த இடத்திற்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. காரணம் அவருடையவெற்றிக்காக உழைத்த இடம் இன்றைய சந்திப்பு நடைபெற்ற இடமாகும்.
அதேபோல்வடக்கு மாகாணசபையில் உண்டான குழப்பங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்இரா.சம்பந்தன் எழுத்துமூலமும் தொலைபேசி மூலமும் தொடர்பாடல்கள் மற்றும்மதத்தலைவர்களான யாழ்.மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞனாப்பிரகாசம், நல்லை ஆதீனமுதல்வர் ஆகியோரது சமரச முயற்சிகளின் தொடர்பாக பேசியிருக்கின்றோம்.
மேலும் வடக்கு மாகாணசபை எமக்கு மிகப் பெரிய பலத்தைக் கொண்ட சபையாகும். மாகாணசபைபிளவுபட்டிருப்பது எமது இனத்தின் விடுதலைக்கு எவ்வகையிலும் உதவியாக இருக்க இயலாது.
அமைச்சு பதவிகளுக்காக சண்டைபோடுவதில் அர்த்தமில்லை. அப்படி இருக்கவும் கூடாது.சபையில் பிரச்சினைகள் ஏற்பட்டமைக்குக் காரணம் முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டகுழுவின் சிபாரிசுகளின் அடிப்படையில் இரு அமைச்சர்களைப் பதவியில் இருந்துநீக்குவதாகவும் குற்றம் காணாத இரு அமைச்சர்களை விடுப்பில் செல்லுமாறு கூறியதில் இருந்துஆரம்பித்த பிரச்சினைதான் முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரைகொண்டுசென்றது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்ந்தோம். தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள சமரசத்திற்குபின்னரான சூழ்நிலையில் எங்களுடைய இலக்கு மாகாணசபையில் அமைச்சுப் பதவிகளைஎதிர்காலத்தில் ஏற்பது அல்ல. போராட்டங்களை நடாத்துவது அல்ல.
அமைச்சுப் பதவி என்பதுஒரு சிறிய விடயமாகும். எங்களுடைய முக்கிய விடயம் எங்களுடைய இனம் பல லட்சக்கணக்கானஉயிர்களைப் பலி கொடுத்துள்ள நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்விற்கு சர்வதேசசமூகம் அழுத்தம் கொடுத்து வருகின்ற நேரத்தில் பாராளுமன்றத்திலும் இதற்கானமுன்னெடுப்புக்கள் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையிலும் மேலும் மீள் குடியேற்றம்,இராணுவத்தினரால் காணி அபகரிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் போன்றவிடயங்களும் நல்லாட்சி அமைக்கப்பட்டுள்ள போதும் அது மக்களுக்கு முழுமையான பயனைஅளிக்காத நிலையில் இவை தொடர்பிலேயே கவனம் செலுத்த வேண்டும் என்பது தொடர்பில்இருவரும் கலந்துரையாடினோம்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பது தொடர்பில் வடக்கு மாகாண சபையும்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்காலத்தில் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்பதில்இணக்கப்பாட்டைக் கண்டுள்ளோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் வடமாகாணமுதலமைச்சரும் கூட்டமைப்பின் ஏனைய கட்சித் தலைவர்களும் ஒன்றுகூடி எவ்வாறு செயற்படுவதுஎன்பது தொடர்பிலும் இத்தகைய பிரச்சினைகள் எழாது செயற்படுவது தொடர்பிலும் இணக்கம்கண்டுள்ளோம்.
மேலும் தற்போது கிடைத்துள்ள சர்வதேச சந்தர்ப்பத்தை நாங்கள் முறையாக பயன்படுத்திதமிழ்த் தேசியத்தின் விடுதலைக்காக ஒன்றுபட்டு இயங்குவதற்கு இணங்கியுள்ளோம்.எதிர்காலத்தில் இவ்வாறான சந்திப்புக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்தலைவர்களுடனும் முதலமைச்சருடனும் கலந்துரையாடுவது என்பதில் இணக்கம் கண்டுள்ளோம்.
மேலும் வடக்கு மாகாணசபையில் ஏற்பட்டுள்ள மாகாண அமைச்சர்களை நியமித்தல் தொடர்பில்எதிர்வரும் வாரத்தில் கூட்டமைப்புக் கட்சித் தலைவருடன் சந்தித்து கலந்துரையாடுவதுதொடர்பிலும் இணக்கம் கண்டுள்ளோம் என்றார்.