மூன்று நாடுகளிடமிருந்து அரிசியை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை

உள்நாட்டு சந்தையை பலப்படுத்தும் நோக்கில் மூன்று நாடுகளிடமிருந்து அரிசியை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நீடிக்கின்ற வறட்சி என்பன உள்நாட்டு உணவு உற்பத்தியில் தாக்கத்தை செலுத்தியுள்ளன.

இந்த நிலையில், தாய்லாந்து, பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா முதலான நாடுகளிடமிருந்து அரிசியை கொள்வனவு செய்யவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியூதீன், அமைச்சின் செயலாளர் சிந்தன லொக்குஹெட்டி மற்றும் நிதி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பி.எம்.பி. அத்தபத்து ஆகியோர் தாய்லாந்து, பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் கடந்த 22 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.