இலங்கையில் தேயிலை உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டு 150 வருடங்கள் நிறைவடைகின்றன.
இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வர்த்தக மற்றும் கல்விக் கண்காட்சி எதிர்வரும் 30ம் திகதி பதுளையில் ஆரம்பமாகவுள்ளது.
உரப் பாவனை மற்றும் உரம் தயாரிக்கப்படும் முறை உள்ளிட்ட விடயங்களை குறித்த கண்காட்சியின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
உயர் தரத்திலான தேயிலைத் தயாரிப்பிற்கு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு இதன் மூலம் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கை தேயிலைச் சபை, தேயிலை ஆய்வு நிறுவகம், சிறிய தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்க சம்மேளனம், தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்களின் சங்கம் ஆகியவற்றின் பங்களிப்புடன் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கண்காட்சியை அமைச்சர் நவீன் திசாநாயக்க ஆரம்பித்து வைக்க உள்ளார். பல கண்காட்சிக் கூடங்களும் இங்கு அமையப் பெற்றுள்ளன.
தேயிலைத் தொழிற் துறையின் ஆரம்பம் முதல் இதுவரையில் இடம்பெற்றுள்ள முன்னேற்றத்தை இந்தக் கண்காட்சி மூலம் அறிந்துகொள்ள முடியும்.