விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சில மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊருக்கு சென்று, கட்சிப் பணிகளை முன்னெடுக்குமாறு கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
கட்சியை வலுப்படுத்தும் பணிகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக துமிந்த திஸாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அல்லது மாகாணசபைத் தேர்தல் இந்த ஆண்டுக்குள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொகுதி அமைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலக்குகள் நிறைவேற்றப்படவிட்டால் அவர்களும் நீக்கப்படுவர் என துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.