மக்களின் அவமதிப்பு, விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதற்கு புதிய பல திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஊடகவியலாளர்களுடன் நேற்று இரவு இடம்பெற்ற தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துக் கொண்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி தேர்தல் தாமதமாகுவதனால் குப்பை சேர்வதாகவும், டெங்கு தொற்று அதிகரிப்பதாகவும், கூட்டுக் எதிர்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி தேர்தல் தாமதத்தினால் டெங்கு தொற்று அதிகரிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.