மக்களின் மீது நேரடி வரியை சுமத்தும் முறை அறிமுகம்

மக்களின் மீது நேரடி வரியை சுமத்தும் முறை அறிமுகம் செய்யப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்றுக் கொண்ட போது 17 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன.

இந்த தீர்மானத்தை தொடர்ந்தும் அமுல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

தற்போது அநேக விடயங்களில் மக்கள் மீது மறைமுக வரியே அமுல்படுத்தப்படுகின்றது.

இந்த முறை இனி வரும் காலங்களில் நேரடி வரி முறை அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

கண்டி மல்வத்து உப பீடாதிபதியை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டதன் பின்னர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.