பாகிஸ்தானில் எண்ணை லொறி தீப்பற்றியதில் 123 பேர் பலி

பாகிஸ்தானின் பஹவல்பூரில் எண்ணெய் ஏற்றிக் கொண்டுச் சென்ற லொறி தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 123 பேர் பலியாகியுள்ளனர்.

பஹவல்பூரிலிருந்து அதிகளவிலான எண்ணையை ஏற்றிக்கொண்டு பயணித்த லொறி திடீரென உராய்வு காரணமாக தீப்பற்றிக் கொண்டத்தில் வீதி முழுவதும் வாகனப் போக்குவரத்தில் தடை ஏற்பட்டது.

விபத்து ஏற்பட்ட லொறியிலிருந்து கசிந்த எரிபொருளை எடுக்கச் சென்ற பலருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.