சைட்டம் தனியார் கல்வி நிறுவனத்தை தடை செய்யாமை, அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கை மற்றும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தல் போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் இணைந்து, நாடு தழுவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.
இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில், வைத்தியர்கள், தாதியர், ஆசிரியர்கள், தபால் துறைமுகங்கள், பெற்றோலியத் துறை, போக்குவரத்து போன்ற அரசதுறை தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க உடன்பாட்டைத் தெரிவித்துள்ளன.
தனியார்துறையில், வர்த்தக வலயத்திலுள்ள தொழிற்சங்கங்கள் பல, தமது உடன்பாட்டை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.