தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்பு தற்போது அதிமுக ஓ.பி.எஸ் அணி, ஈ.பி.எஸ் அணி மற்று டிடிவி தினகரன் அணி மூன்று அணிகளாக இயங்கி வருகிறது.
இதற்கிடையில் கடந்த பிப்ரவரி மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.
அப்போது கூவத்தூரிலிருந்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு ஓ.பி.எஸ், சசிகலா அணியினர் கோடிக்கணக்கில் பேரம் பேசியதாக செய்திகள் வெளியாகின.
அதற்கான வீடியோவை பிரபல ஆங்கில தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், அ.தி.மு.க பன்னீர்செல்வம் அணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வாசுதேவநல்லூர் எம்எல்ஏ மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது மனோகரன் கூறுகையில், நான் பன்னீர்செல்வம் அணிக்கு வந்ததும், சசிகலா அணியினர் என்னிடம் கோடிக் கணக்கில் பேரம் பேசியது உண்மைதான் எனவும் சசிகலா அணியில் 30 கோடி ரூபாய் வரை பேரம் பேசினாலும் நாங்கள் போகப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.