இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பல்வேறு சாதனைகளை படைத்துள்ள விராட் கோலிக்கு சமூக வலைதளங்களில் கோடிக்காணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் இவரை கோடிக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்ந்து வந்து, கோலி வெளியிடும் கருத்துக்களை படித்து வருகின்றனர்.
இந்த வகையில் பேஸ்புக்கில் கோலியை பின்தொடர்புவர்களின் எண்ணிக்கை 35 மல்லியனை தாண்டியுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் உள்ள பிரபலங்களில் அதிகஅளவு ரசிகர்களால் பின்தொடர்பவர்களில் கோலி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
கோலி 3 கோடியே 54 லட்சத்து 37 ஆயிரத்து 354 ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியை 4 கோடியே 17 லட்சத்து 85 ஆயிரத்து 327 பேர் பின்தொடர்கிறார்கள்.
விராட் கோலியை விட சல்மான் கான் 6 லட்சம் குறைவாக உள்ளார். உலகளவில் விராட் கோலி 52-வது இடத்தில் உள்ளார். கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் இடத்தை பிடித்துள்ளார்.