நாளை முதல் நாட்டில் ஏற்படப் போகும் மாற்றம்!

நாளை முதல் மழை குறையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சியுடன் கூடிய காலநிலையினால் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில் நாளையிலிருந்து மாற்றம் பதிவாகும் என தெரிவிக்கப்படுகிறது.எனினும், இடைக்கிடை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் நிமால் பண்டார தெரிவித்துள்ளார்.

மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடை மழை பெய்யக் கூடும் எனவும், இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும், அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையுள்ள பகுதியில் காற்றின் வேகம் குறையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.