-
மேஷம்
மேஷம்: மனதிற்கு பிடித்த வர்களை சந்திப்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடனை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பங்குதாரர் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திட்டம் நிறைவேறும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச் சல், டென்ஷன் யாவும் நீங் கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணவரவு திருப்தி தரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
-
கடகம்
கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். அதிகாரி களால் அலைகழிக்கப்படுவீர்கள். பொறுப் புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
-
சிம்மம்
சிம்மம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும்.பிள்ளைகளிடம் கோபப் படாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
-
கன்னி
கன்னி: பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.
-
துலாம்
துலாம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்கு வீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர் களிடம் சொல்லி மகிழ்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர் கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறு வீர்கள். யற்சிகள் பலிதமாகும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். இழுபறி யாக இருந்த வேலைகள் முடியும். நீண்ட நாள் பிரச்னைகள் தீரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனநிறைவு கிட்டும் நாள்.
-
தனுசு
தனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் கொஞ்சம் அலைச் சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
-
மகரம்
மகரம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தைக் கைக்கூடும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
-
கும்பம்
கும்பம்: வராது என்றிருந்த பணம் வரும். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.
-
மீனம்
மீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.