இந்த அரசாங்கம் இனவாத அடிப்படையில் செயற்பட்டு வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.
தம்பதெனியவில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
இனவாதத்தை தூண்ட வேண்டாம் எனக் கூறிக்கொண்டே இந்த அரசாங்கம் பௌத்த தேரர்களை சிறையில் அடைக்கின்றது.
மஹிந்தவுடன் இருக்கும் அனைவரையும், நான் உள்ளிட்ட எல்லோரையும் சிறையில் போட்டார்கள்.
அவரது பிள்ளைகள் இருவரையும் சிறையில் அடைத்தார்கள். எனினும் அவரது தன்னம்பிக்கையை எவராலும் ஒரு கடுகளவேனும் குறைத்துவிட முடியாது.
இந்த அரசாங்கம் அபிவிருத்தியை நிறுத்திவிட்டு பழிவாங்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காண்பித்து வருகின்றது.
அரசாங்கம் மக்களின் வாக்குரிமையை பறித்துக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.
தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் மக்கள் தகுந்த பாடத்தை அரசாங்கத்திற்கு புகட்டுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.