மார்கழி மாதத்தை, மார்கசீர்ஷம் என்று வடமொழியில் சொல்வர். மார்கம் என்றால், வழி – சீர்ஷம் என்றால், உயர்ந்த – வழிகளுக்குள் தலைசிறந்தது என்பது பொருள். இறைவனை அடையும் உயர் வழியே சரணாகதி. சூன்யம் என்றால், ஒன்றுமில்லாதது எனப் பொருள்.
நம் வாழ்க்கை ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தைக் கடைபிடிக்க வேண்டும். லௌகீகங்களுக்காக இல்லாமல், ஆன்மீக நிகழ்வுகளுக்காக மட்டுமே என்று இம்மாதத்தை முன்னோர் ஒதுக்கி வைத்தார்கள்.
நமது உடலையும் உள்ளத்தையும் நல்ல விதமாக ஆக்கிக்கொள்வதற்கு உரிய மாதம் மார்கழி மாதம். இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால், வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை நடத்தாமல் தவிர்த்தனர்.
இதற்காகவே, ஆண்டாளும், மாணிக்கவாசகரும், திருப்பாவை, திருவெம்பாவை பாடி, நமக்கு வழிகாட்டியுள்ளனர்.