கண் கட்டியை நொடியில் போக்கலாம்: அற்புத தீர்வு இதோ

கண்களின் இமைகளில் கட்டி போன்று உருவாகுவது தான் கண்கட்டி. இதனால் கண்களில் வலி, சிவந்து போதல், கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.

கண்கட்டி ஏற்பட காரணம் என்ன?

உடலில் அதிகப்படியான சூடு, நீர் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைவு, சுகாதாரம் இல்லாமல் இருப்பது இது போன்ற பல காரணங்களினால், கண்களில் கண்கட்டி பிரச்சனைகள் ஏற்படுகிறது.

எனவே அத்தகைய கண்கட்டி பிரச்சனைகளை நொடியில் குணப்படுத்த இயற்கையில் உள்ள அற்புதமான தீர்வுகள் இதோ!

தனியா விதை

ஒரு கைப்பிடி அளவு தனியா விதைகளை நீரில் போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வைத்து, வடிகட்டி வெதுவெதுப்பான நிலையில் அந்த நீரைக் கொண்டு கண்களை நன்கு கழுவ வேண்டும். இதை தினமும் 3 முறைகள் பின்பற்றினால் உடனடி பலன் கிடைக்கும்.

கொய்யா இலை

கொய்யா இலையை லேசாக சூடுபடுத்தி, அதனை ஒரு மெல்லிய துணியின் மூலம் மூடி, அதை கொண்டு கண்களின் மேல் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

உருளைக் கிழங்கு தோல்

உருளைக் கிழங்கு தோலை சீவி அதனை கண்களில் உள்ள கட்டிகள் மீது 10 நிமிடங்கள் வைக்க வேண்டும். இதனால் உடனடி நல்ல பலன் கிடைக்கும்.

உப்பு

உப்பை வெறும் வாணலில் சூடுபடுத்தி, அதை ஒரு துணியால் கட்டி, கண்கள் மீது ஒத்தடம் கொடுக்க வேண்டும். அல்லது வெதுவெதுப்பான நீரில் உப்பை கரைத்து அதனைக் கொண்டு கண்களை கழுவ வேண்டும்.

முட்டை

முட்டையை வேக வைத்து, அதன் ஓட்டை எடுக்காமல் கண்கள் மீது பொறுக்கும் சூட்டில் வைக்க வேண்டும். இம்முறையை 5 நிமிடம் செய்தால், கண்வலி குணமாகும்.

பாலாடை

பாலாடை எடுத்து அதனை கண்கள் மீது தடவி, சிறிது நேரம் கழித்து, காய்ந்ததும் பாலினால் கண்களை துடைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கண்களை நன்கு கழுவ வேண்டும்.