சுவாதி கொலை வழக்கில் யாரையோ காப்பாற்றுவதற்காக தங்கள் மகனை கொலை செய்து விட்டார்கள் என ராம்குமார் பெற்றோர் கூறியுள்ள நிலையில், ராம்குமாரின் தங்கைகள் படிப்பை தொடர முடியாமல் உள்ளனர்.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26-ஆம் திகதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளரான சுவாதி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக ராம்குமார் என்பவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், செப்டம்பர் 18-ஆம் திகதி சிறைச்சாலைக்குள் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பியைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை ஆரம்பிக்கும் முன்னரே அவர் இறந்துவிட்டதால் பல சந்தேகங்களுக்கு விடை கிடைக்காமலேயே இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ராம்குமாரின் பெற்றோர் அளித்துள்ள பேட்டியில், தங்கள் மகனை யாரையோ காப்பாற்றுவதற்காக கொலை செய்து விட்டதாக கூறியுள்ளனர்.
மேலும், இந்த வழக்கை மீண்டும் சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
ராம்குமார் மரணத்தால் அவர் குடும்பமே நிலை குலைந்துள்ளது. ராம்குமாரின் இரு தங்கைகளும் படிப்பை தொடர முடியாமல் உள்ளனர்.
ராம்குமார் குடும்பத்துக்கு ஒரு குடிசை மற்றும் சில ஆடுகள் மட்டுமே சொத்து என அவர் வீட்டு அருகில் வசிப்பவர்கள் கூறியுள்ளனர்.