ஹிஸ்புல் அமைப்பின் தலைவர் சலாவுதீன் சர்வதேச பயங்கரவாதி: அமெரிக்கா அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயங்கும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவராக இருக்கும் சலாவுதீனை சர்வதேச பயங்கரவாதி என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயங்கும் தீவிரவாத அமைப்பு ஹிஸ்புல் முஜாகிதீன். இதன் தலைவராக இருப்பவர் சலாவுதீன். இந்த அமைப்பு இந்தியாவில் பல்வேறு நாசவேலையில் ஈடுபட்டு வந்துள்ளது. இதன் தலைவராக இருக்கும் சலாவுதீன் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் இணைந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று அந்த அமைப்பின் தலைவரான சலாவுதீனை சர்வதேச பயங்கரவாதி என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள மோடி இன்று அந்நாட்டு அதிபர் டிரம்பை சந்திக்க இருக்கிறார். இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவை இந்தியா வரவேற்றுள்ளது.

இந்த முடிவின் விளைவாக, அமெரிக்க குடிமக்கள் சலாவுதீன் உடன் எந்த வகையான தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. அமெரிக்காவின் அதிகார எல்லைக்கு உட்பட்ட சாவுதீனின் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.