தென்ஆப்பிரிக்க அணியின் முன்னணி பேட்ஸ்மேனும், ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் திகழ்ந்து வருபவர் ஏபி டி வில்லியர்ஸ். மைதானத்தின் எந்த திசைக்கும் பந்தை பறக்கவிடும் திறமை படைத்தவராக திகழ்வதால், இவரை 360 டிகிரி என்று அழைக்கிறார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது இவருக்கு காயம் ஏற்பட்டது. அதன்பின் நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த டி வில்லியர்ஸ், நியூசிலாந்து தொடரின்போது மீண்டும் களம் இறங்கினார். ஆனால், டி வில்லியர்ஸால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி லீக் சுற்றோடு வெளியேறியது. இதில் டி வில்லியர்ஸ் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. இந்த தொடருக்குப்பின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 லீக் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது. இதில் ஒரு போட்டியில் மட்டுமே அரைசதம் அடித்தார். இந்த தொடரை தென்ஆப்பிரிக்கா 1-2 என இழந்தது.
இதனால் அவர் தொடர்ந்து இந்திய அணியில் நீடிப்பாரா? என்ற கேள்வி எழும்பியுள்ளது. இதுகுறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில், தனது எதிர்காலம் குறித்து ஆகஸ்ட் மாதம் முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 6-ந்தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 8-ந்தேதி தொடர் முடிவடைகிறது. இந்த தொடர் முடிந்தபின்னர், தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துடன் டி வில்லியர்ஸ் தன்னுடைய எதிர்காலம் குறித்து பேச இருக்கிறார்.