இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் அனில் கும்ப்ளே. இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது கும்ப்ளேவிற்கும், விராட் கோலிக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்ததாக செய்து வெளியானது.
பின்னர் இந்த செய்து உறுதியானது. சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் கும்ப்ளேயின் ஒருவருட பதவிக்காலம் முடிவடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை பயிற்சியாளர் பதவியில் நீடிக்குமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டது.
ஆனால் கும்ப்ளே தனது பதவியில் இருந்து விலகினார். இதனால் பிசிசிஐ புதிய பயிற்சியாளரை தேடிவருகிறது. கடந்த ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து மகேளா ஜெயவர்தனே இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு தேர்வாகளாம் என்ற செய்து வெளியானது.
இந்நிலையில் அந்த செய்தியை மகேளா ஜெயவர்தேனா மறுத்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு என்னுடைய பெயரை தொடர்பு படுத்திக் கொள்வதன் மூலம் பெருமை பட்டுக் கொள்ளலாம். ஆனால், தற்போது வரை நான் முழுநேர பயிற்சியாளர் பதவியை எதிர்பார்க்கவில்லை.
தற்போது நான் கமிட்மென்ட் ஆகியுள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் குல்னா அணியின் பயிற்சியாளர் பதவி மீதுதான் கவனம் செலுத்து வருகிறேன்’’ என்று கூறியுள்ளார்.