கல்வி அமைச்சர் நியமிக்கப்படவில்லை : பொறுப்புக்கள் அனைத்தும் என் வசம்.. விக்னேஸ்வரன்

புதிய கல்வி அமைச்சராக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த வியடம் தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு விக்கினேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இதில் எந்த வித உண்மையும் இல்லை. யார் யாரை நியமிப்பது என்பது சம்பந்தமாக என்னால் முடிவெடுக்கப்படவில்லை எனறும் கூறியுள்ளார்.

செயல் நடவடிக்கைகளுக்கும் அமைவாக உரிய நேரத்தில் குறிப்பிட்ட நியமனங்கள் என்னால் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்பொழுது பதவி விலகிய அமைச்சர்களின் அமைச்சுக்களை நானே மேற்பார்வை செய்து வருகின்றேன் எனவும் அறிக்கையில் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.