வித்தியா படுகொலை தொடர் விசாரணைக்கு உத்தரவு

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை ட்ரயல் அட்பார் முறையில் தொடர்ந்து 6 நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய நாளை முதல் வழக்கு விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது.

பிரதம நீதியரசர் பிரியசத் டெப்பினால் நியமிக்கப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய குழு முன்னிலையில் இந்த விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேமசங்கர் ஆகிய உறுப்பினர்களுடன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனின் தலைமையில் இந்த தொடர் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது