ஜனாதிபதி மாளிகை முற்றுகை வடக்கு மக்கள் போராட்டம்!

காணி விடுவிப்புக்காகப் போராடிவரும் வடக்கைச் சேர்ந்த மக்கள் மற்றும் தெற்கைச் சேர்ந்த சிங்கள அமைப்புக்கள் ஒன்றிணைந்து இன்றையதினம் கொழும்பு கோட்டையில் இருந்து ஜனாதிபதி மாளிகை நோக்கி அமைதிவழிப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்கள்.

வடக்குஇ கிழக்கில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி அந்த நிலங்களின் மக்கள் தொடர் போராட்டத்தினை நடத்தி வருவது தெரிந்ததே.

நூறு நாட்களைக் கடந்தும் போராட்டங்களை நடத்திவரும் மக்களுக்கு எவ்வித தீர்வும் முன்வைக்கப்படாத நிலையிலேயே இன்றைய தினம் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த மக்களே ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி மாளிகையை சூழ்ந்துள்ளபோதும்இ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்காக இவர்களிலிருந்து எட்டு பேரைத் தெரிவு செய்து பொலிஸார் அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது