மைதானம் இருந்தால் போட்டியை நடத்தத் தயார்: மஹிந்த தேசப்பிரிய

மைதானம் இருந்தால் போட்டியை நடத்தத் தயார் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

போட்டியை நடத்த வேண்டுமாயின் ஆடுகளத்தை தயார்படுத்த வேண்டும். ஆடுகளத்தை தயார்படுத்தும் பொறுப்பு நாடாளுமன்றத்தினுடையது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை ஒக்டோபர் மாதத்திலும், சபரகமுவ, ஊவா மற்றும் வட மாகாண சபைத் தேர்தல்களை டிசம்பர் மாதத்திலும் நடத்த முடியும்.

எனினும், தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்த சட்டவரைவுத் திட்டம் விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டால் தேர்தலை நடத்த முடியும் என மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.