இராணுவத் தளபதிக்கு பதவி உயர்வு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய இராணுவத் தளபதி லெப்டின் ஜெனரல் கிறிசாந்த டி சில்வாவிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இது வரை காலமும் இராணுவ தளபதியாக இருந்த இவர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதேவேளை, நாளை இராணுவத் தளபதிக்கு விசேட இராணுவ மரியாதை அணிவகுப்பு ஒன்று வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், முப்படைத் தளபதிகளில் அதிகளவு அனுபவம் கொண்டவராக காணப்படும் இவர் பதவி நீடிப்பின் அடிப்படையில் இராணுவத் தளபதியாக இராணுவத்தில் கடமையாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.