முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தேவையான உதவிகளை வழங்க பாகிஸ்தான் தாயராக உள்ளதாக பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹசைன் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச கடந்த வாரம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் சென்றிருந்தார்.
இதன்போது பாகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன் மஹிந்தவின் பாகிஸ்தான் விஜயத்தை இரத்து செய்யுமாறு இலங்கை அரச உயர்மட்டம் கோரிக்கை முன்வைத்ததாக அந்நாட்டு அரச தரப்பு மஹிந்தவிடம் தெரிவித்துள்ளது.