ஜனாதிபதியின் அதிகாரம் தொடர்பில் சர்ச்சை!

ஜனாதிபதியின் அதிகாரம் தொடர்பில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பொரளையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…

உன்னத சட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு உண்டான அதிகாரங்களை அமைச்சர் ஒருவர் எதேச்சாதிகாரமாக கைப்பற்றிக் கொள்ள முடியுமாயின், ஜனாதிபதி பதவியின் நடைமுறை ரீதியான பெறுமதி என்ன?

லொத்தர் சபைகள் இரண்டினை நிதி அமைச்சிலிருந்து பிரித்து வெளிவிவகார அமைச்சில் இணைக்கப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பின் பிரகாரம் அமைச்சர்களுக்கும் நிறுவனங்களுக்கும் துறைகளை ஒதுக்கிக் கொடுக்கும் பணி ஜனாதிபதிக்கு உரியதாகும்.

வெளிவிவகார அமைச்சர் ஒருவருக்கு எவ்வாறு லொத்தர் சபையை வழங்க முடியும்?

இந்த தீர்மானம் ஜனாதிபதியின் தேவைக்கு ஏற்ப எடுக்கப்பட்டது என்றால் அதனை எவரும் நம்ப மாட்டார்கள்,

ஜனாதிபதி இன்று கைப் பாவையாகவே செயற்படுகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.