-
மேஷம்
மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர் களின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: திட்டமிட்ட காரியங் களை சிறப்பாக முடிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத் தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆறுதல் அடைவீர்கள். பழைய நினைவு களில் மூழ்கும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். வெற்றி பெறும் நாள்.
-
கடகம்
கடகம்: கடந்த இரண்டு நாட் களாக இருந்த மனஇறுக்கம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர் பார்த்த பணம் வரும். விலகிச் சென்ற
உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப் பார். தடைகள் உடைபடும் நாள். -
சிம்மம்
சிம்மம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
-
கன்னி
கன்னி: எதிர்பார்ப்புகள் தாமதமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வேலைச்சுமை இருந்து கொண்டே யிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து விலகும். போராடி வெல்லும் நாள்.
-
துலாம்
துலாம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். சகோதர வகையில் ஆதாயம் உண்டு. வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சாதித்துக் காட்டும் நாள்.
-
தனுசு
தனுசு: கடந்த இரண்டு நாட்க ளாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். உடல் நலம் சீராகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
-
மகரம்
மகரம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். முன்கோபத்தால் பகை உண்டாகும். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. போராட்டமான நாள்.
-
கும்பம்
கும்பம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத் தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
-
மீனம்
மீனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.