வெளிநாட்டு சுற்றுப் பயணம் முடிந்து பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினார். அவரை டெல்லி விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பிரதமர் நரேந்திர மோடி போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக கடந்த 24ஆம் தேதி புறப்பட்டார்.. முதலில் போர்ச்சுகல் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி பின்னர், 25 மற்றும் 26 தேதிகளில் அமெரிக்கா சென்றார்.
அங்கு அதிபர் ட்ரம்பை முதல்முறையாக சந்தித்த மோடி ட்ரம்புடன் கலந்தாலோசித்தார். பின்னர் ட்ரம்பின் இரவு விருந்திலும் கலந்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையேயும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அங்குள்ள இந்தியர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார். பின்னர் நெதர்லாந்து சென்ற மோடி தனது நான்கு நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்பினார்.
அவரை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டெல்லி விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார். தொடர்ந்து விமான நிலையத்தில் பா.ஜ., ஆதாரவாளர்கள் பெரும் அளவில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்