அடுத்த ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தை கேலரியில் அமர்ந்து பார்ப்பேன்: உசைன் போல்ட்

உலகின் அதிவேக ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட். ஜமைக்காவை சேர்ந்த அவர் 100, 200 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையாளர் ஆவார்.

100 மீட்டரை 9.58 வினாடியிலும், 200 மீட்டரை 10.13 வினாடியிலும் கடந்து சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் 8 தங்கம் பதக்கம் வென்று இருக்கிறார்.

செக்குடியரசில் நடக்கும் உலக தடகள போட்டியில் பங்கேற்க சென்றுள்ள அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் சிறந்த ஆட்டங்களை பெற்று இருக்கிறேன். எனக்கு என்ன தேவையோ அதை அனைத்தையும் செய்து விட்டேன். தற்போது அது முடிவுக்கு வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். லண்டனில் நடக்க இருக்கும் உலக தடகள சாம்பியன் போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறேன். அப்போட்டி எனக்கு உணர்வுபூர்வமாக இருக்கும்.

அடுத்த ஒலிம்பிக் போட்டியில் 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கேலரியில் அமர்ந்து பார்ப்பேன். தற்போது நிறைய இளம் வீரர்கள் வருகிறார்கள். இதில் யார் பட்டத்தை வெல்வார்கள் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.