இலங்கையில் கடந்த வருடத்தில் மாத்திரம் 1,155,215 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு 1,129,555 குற்றங்கள் பதிவாகியிருந்ததுடன், 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பை காட்டுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு பாரிய குற்றங்கள் என்ற அடிப்படையில் 40,188 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இது 2015ஆம் ஆண்டில் 36,937 பாரிய குற்றங்கள் பதிவாயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று சிறு குற்றங்களும் 43ஆயிரத்து 570இல் இருந்து 45ஆயிரத்து 579ஆக உயர்ந்திருந்தது.
சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் 2015ஆம் ஆண்டில் 30ஆயிரத்து 665 குற்றங்கள் பதிவாகியுள்ளன. பெண்களுக்கு எதிராக 2015ஆம் ஆண்டில் 8288 குற்றங்கள் பதிவான அதேநேரம் 2016ஆம் ஆண்டு அவை 9,042ஆக உயர்ந்திருந்தன.
போதைப்பொருள் தொடர்பில் 2015ஆம் ஆண்டைக்காட்டிலும் 2016ஆம் ஆண்டு வீழ்ச்சிப்போக்கு பதிவாகியுள்ளது. இதன்படி 2015இல் 89,996 குற்றங்களும், 2016இல் 88,352 குற்றங்களும் பதிவாகியுள்ளது.
மதுபானங்கள் தொடர்பிலான குற்றங்கள் 2015ஆம் ஆண்டு 113,944 ஆக பதிவான நிலையில் 2016இல் அவை, 120,105ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மோட்டார் விபத்துக்கள் 2015இல் 36,918ஆக இருந்த அதேநேரம் 2016 இல் அவை 39,056 ஆக உயர்வடைந்திருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.