எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாமல், உடலில் ஏற்படும் சுளுக்கு மற்றும் காயங்களை போக்க இயற்கையில் உள்ள அற்புதமான வழி இதோ,
காயங்களை போக்க உதவும் பொருட்கள் எவை?
பூச்சிக்கடி, சுளுக்குகள், காயங்கள் போன்ற பிரச்சனைகளுக்கு பூண்டு சாறு மற்றும் உப்பு கலந்த கலவையை பயன்படுகிறது.
ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அதை தேனீக்கள் கொட்டிய இடத்தில் தடவ வேண்டும். இதனால் வீக்கம் ஏற்படாமல் தடுக்கலாம்.
கற்றாழையின் ஜெல்லானது வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருப்பதுடன், அடிப்பட்ட இடங்களில் தேய்க்கும் போது எரிச்சலைக் குறைத்து, குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கீழே விழுந்த காயங்கள், வெட்டு காயங்கள் போன்ற பிரச்சனைகளை குணமாக்க, தேனில் உள்ள அழற்ஜி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி- பாக்டீரியல் குணங்கள் சிறந்த முதலுதவி பொருளாக உதவுகிறது.
மஞ்சள் தூள் சிறந்த கிருமி நானிசி என்பதால், அதை அடிபட்ட இடங்கள், வெட்டு பட்ட காயங்களில் மஞ்சள் தூளை தேய்த்தால், அது நோய் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கும்.
தேனீ கொட்டிய காயங்கள், சில வகை பூச்சிக் கடியினால் ஏற்படும் அரிப்பு போன்ற பிரச்சனைக்கு ஆப்பிள் சிடர் வினிகர் பயன்படுகிறது.
துளசியின் இலையானது கொசுக்கடி மற்றும் சரும அரிப்பு போன்ற பிரச்சனைகளை குணமாக்க ஒரு சிறந்த முதலுதவியாக உதவுகிறது.