புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகள் 7 நாட்களுக்குள் முடிவுறுத்த வேண்டும் என பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்வம் தொடர்பில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தின் அடிப்படையில் விசாரணைகள் இன்று யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் உள்ளடங்கிய குழுவின் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இன்றைய அமர்வில், பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா இன்றைய அமர்வில் கலந்து கொண்டு ஆரம்ப உரையாற்றியிருந்தார்.
இந்நிலையில், வழக்கின் விசாரணைகள் 7 நாட்களுக்குள் முடிவுறுத்த வேண்டும் என பதில் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிவில் சாட்சியப் பதிவுகள் நாளை ஆரம்பமாகும் எனவும், நிபுணத்துவ சாட்சியப் பதிவுகள் அடுத்த வாரம் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் தடுப்பு காவலில் உள்ள ஒன்பது சந்தேகநபர்களும் இன்றைய தினம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.