இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 155.02 ரூபாவை கடந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ரூபாயுடன் ஒப்பிடும் போது டொலரின் அதிகரிப்பானது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகின்றது.
இதேவேளை இந்த மாதத்தில் அமெரிக்க டொலரின் பெறுமதி 155 என்ற இலக்கத்தை இரண்டு முறை கடந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.