மயிலிட்டியில் 50 ஏக்கர் காணி ஜீலை 3 இல் விடுக்க ஏற்பாடு

யாழ்ப்பாணம் மயிலிட்டி பிரதேசத்தில் 50 ஏக்கர் காணி படையினரால் விடுவிக்கப்படவுள்ளது.

இந்த காணிகள் எதிர்வரும் ஜுலை மாதம் 3ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

இந்த காணி அப்பிரதேச அரசாங்க அதிபரிடம் இராணுவத்தினரால் அன்றையதினம் கையளிக்கப்படவுள்ளது.

இதன்மூலம் 51 குடும்பங்கள் 50 ஏக்கர் காணியில்    மீளக்குடியமரக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.