யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு பொலிஸ் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் வீதியோர கடமை செய்யும் மாணவர்களுக்கான போக்குவரத்து சம்பந்தமான உபகரணங்கள் கையுறை போக்குவரத்து புத்தகங்கள் மேலங்கி என்பன இன்றைய தினம் வழங்கப்பட்டன.
தற்போது பாடசாலைகளுக்கான வீதியோர கடமை செய்யும் மாணவர்களுக்கான போக்குவரத்து உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறன.
இதன் ஒரு கட்டமாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதனின் தலைமையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் வீதியோர கடமை செய்யும் மாணவர்களுக்கான போக்குவரத்து சம்பந்தமான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில் கல்லூரி சட்டத்தரணி செவ்வேள் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதே வேளை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கமும் இன்ரறக்ட் கழகமும் இணைந்து நடாத்தும் குருதிக் கொடை முகாம் இன்றைய தினம் பாடசாலை குமரசாமி மண்டபத்தில் இடம் பெற்றது.
இதனை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் ஆரம்பித்து வைத்ததுடன் நிகழ்வில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு குருதி தானம் செய்தனர்.