தமிழ்மக்களின் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் ‘தேசிய இனப்பிரச்சினையும் சமூக முரண்பாடும்’ எனும் தலைப்பிலான கருத்துரையும், கலந்துரையாடலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்- 03 மணி முதல் யாழ். உரும்பிராய் வடக்கு சரஸ்வதி கலையரங்கத்தில் நடைபெற்றது.
மையத்தின் இணைப்பாளர் என். இன்பம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சமூக ஆய்வாளரும் கவிஞருமான ஜெகநாதன்(நக்கீரன்) பிரபல அரசியல் ஆய்வாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான சி. அ.யோதிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகள் ஆற்றினர்.
அதனைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடலும் இடம்பெற்றது. தமிழ்மக்களின் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம் யாழ். குடாநாட்டிலுள்ள கிராமங்களை மையப்படுத்தி மாதாந்தம் ஒரு அரசியல் மற்றும் சமூக ரீதியான கருத்துரையையும் கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்து நடாத்தி வருகிறது.